இலங்கை

சஜித் பிரேமதாச மற்றும் குடும்பத்தாரின் சொத்து தொடர்பில் முறைப்பாடு

Published

on

சஜித் பிரேமதாச மற்றும் குடும்பத்தாரின் சொத்து தொடர்பில் முறைப்பாடு

   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்து விவரம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கோரி இலஞ்ச, ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கெதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமந்த துஷார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று (25) முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, சஜித் பிரேமதாச மற்றும் குடும்பத்தாரின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் முறையாக முன்வைக்கப்படாவிட்டால் சட்டம் அமுல்படுத்தப்படவேண்டுமென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அந்தக் கட்சியில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஏற்றுமதிகள், இறக்குமதிகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது, நாமல் ராஜபக்ஷ உரையாற்றுகையில் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவிக்கையில்,

Advertisement

எந்தவொரு கைது சம்பவமும் நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கமையவே இடம்பெற்றுள்ளன. முன்னாள் கடற்படைத் தளபதி புலனாய்வுப் பிரிவில் இருந்த போதான செயற்பாடு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று கொள்கலன்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கிடைக்கப்பெறும். சகல முறைப்பாடுகள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுக்கின்றது.

இந்நிலையில் போதைப்பொருட்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது விரலை நீட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டது. ஆனால் மொட்டுக் கட்சியை சேர்ந்த சம்பத் மனம்பேரி இதில் தொடர்புபட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.

Advertisement

அவர் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனின் ஒருங்கிணைப்புச் செயலாளராவர்.

இதன்படி போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் வேண்டியளவு அந்தக் கட்சியில் இருக்கின்றனர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதனுடன் தொடர்புடையவர்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நாட்டுக்கு போதைப்பொருட்களை கொண்டு வருபவர்கள் யார் என்பதனை மக்கள் அறிவர். சம்பத் மனம்பேரி மொட்டுக் கட்சியின் அமைப்பாளராகவும் ஜொன்ஸ்டனின் ஒருங்கிணைப்புச் செயலாளராவார்.

Advertisement

இவர்கள் போதைப்பொருட்களை கொண்டுவந்து, தங்கள் மீது வருபவற்றை மற்றையவர் மீது சுமத்தவே முயற்சிக்கின்றனர்.

நாட்டில் அரசியல் ஆசீர்வாதத்துடன் பாதாள குழுக்களை வளர்த்து, போதைப்பொருட்களை கொண்டுவந்து மூன்றையும் தொடர்புபடுத்தி, முழு நாட்டையும் சீரழித்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்குலைத்து நாட்டு மக்கள் விரட்டியடித்த பின்னரும் பாராளுமன்றத்துக்கு வந்து எதிர்க்கட்சியின் கடமைகள் தொடர்பில் கதைக்கின்றனர்.

எங்களுக்கு கிடைத்த தகவல்களுக்கமைய போதைப்பொருள் ஒழிப்ப்பு பிரிவினர் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கின்றோம்.

Advertisement

தவறுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கின்றோம். நாங்கள் உங்களைப் போன்று நடந்துகொள்ளப் போவதில்லை என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version