பொழுதுபோக்கு

சாப்பாடு இல்லாத வாழ்க்கை, கிரிக்கெட்டை கைவிட்டு நடிக்க வந்த சின்னத்திரை சூப்பர் ஸ்டார்; இப்போ இந்த நடிகரின் ரேஞ்சே வேற!

Published

on

சாப்பாடு இல்லாத வாழ்க்கை, கிரிக்கெட்டை கைவிட்டு நடிக்க வந்த சின்னத்திரை சூப்பர் ஸ்டார்; இப்போ இந்த நடிகரின் ரேஞ்சே வேற!

‘பர்பி’, ‘பிகு’, ‘சகுந்தலா தேவி’ போன்ற சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜிஷு செங்குப்தா. இவர் தற்போது கஜோல் நடிப்பில் வெளியாகவுள்ள ‘டிரையல் சீசன் 2’ வெப் தொடரில் நடித்துள்ளார்.சினிமாத் துறையில் மிகவும் பிரபலமாக உள்ள ஜிஷு செங்குப்தா தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “நான் பின்புலம் இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவன். எங்கள் வீட்டில் உணவிற்கு பணம் இல்லாத நாட்களும் இருந்தது.என் அப்பாவால் பில் கட்ட முடியாததால் ஆறு மாதம் எங்கள் வீட்டில் கரண்ட் இல்லாமல் இருந்தோம். ஆனால், அந்த வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. பணம் இல்லாமல் இருந்தாலும் அந்த வாழ்க்கை அழகாக இருந்தது.நான் என் குடும்ப சூழ்நிலை காரணமாக மாலை நேரத்தில் கிரிக்கெட் மற்றும் டிரம்ஸ் வாசிக்க செல்வேன். எனக்கு 18 வயது இருந்த போது ‘மகாபிரபு’ நிகழ்ச்சிக்காக ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது என் கண்கள் முழுவதும் கண்ணீர் நிரம்பி இருந்தது. அந்த ஆடிஷனில் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பின்னர், ஏழு நாட்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் தொலைபேசி இல்லாததால் பக்கத்து வீட்டிற்கு அவர்கள் போன் செய்து ஸ்கிரிப்ட் பேப்பரை வந்து வாங்கி கொள்ளுமாறு தெரிவித்தனர். ‘மகாபிரபு’ ஷோ மூலம் எனக்கு ஒரு நாளைக்கு ரூ.250 கிடைக்கும். அந்த நேரத்தில் அந்த பணம் எவ்வளவு பெரியது என்று என்னால் வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. சிறுது நாட்களில் அந்த நிகழ்ச்சி பெரிய ஹிட்டானது. அதனால் நானும் சூப்பர் ஸ்டார் ஆனேன். ஒரு நாளைக்கு 72 மணிநேரம் உழைப்பேன். அதுமட்டுமல்லாமல் என்னை கொல்கத்தாவின் ஹிருத்திக் ரோஷன் என்று ஒரு புத்தகத்தின் அட்டை பக்கத்தில் போட்டிருந்தார்கள். படங்களில் நடிப்பதற்காக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். இதனால் ஆறு மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தேன். பணம் இல்லாததால் நான்காவது ஹீரோவாக கூட நடிக்க ஆரம்பித்தேன். 10 வருடங்களாக நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று முத்திரை குத்தப்பட்டேன். கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குநர் ரிதுபர்னோ கோஷை சந்தித்த பின்பு தான் எனது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது” என்றார்.நடிகர் ஜிஷு தற்போது பெங்காலி சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version