பொழுதுபோக்கு
சாய் அபயங்கர் இசையில் முதல் படம்; மலையாள சினிமாவில் அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர்: தயாரிப்பாளர் ஓபன்!
சாய் அபயங்கர் இசையில் முதல் படம்; மலையாள சினிமாவில் அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர்: தயாரிப்பாளர் ஓபன்!
தமிழ் திரையுலகம் இளம் இசையமைப்பாளர்களை தொடர்ந்து வரவேற்று வருகிறது. அப்படி வந்தவர் தான் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். இளம் இசையமைப்பாளரான இவர் பாடகர்கள் திப்பு – ஹரிணியின் மகன் ஆவார்.இவர் இசையமைத்து பாடிய ‘கட்சி சேர’, ‘ஆசை கூட’ பாடல்கள் பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டடித்தன. இந்த பாடல்களுக்கு ரசிகர்கள் இன்ஸ்டாவில் ரீல்ஸ்களை செய்து குவித்தனர். சாய் அபயங்கர் இசையில் கடைசியாக வெளியான ‘சித்திர புத்திரி’ ஆல்பம் பாட்டும் ஹிட்டானது. இதனால் அவர் ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தார். இப்படி வரிசையாக தனது பாடல்கள் ஹிட்டடித்ததால் சாய் அபயங்கர் நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழில் இன்னும் இசையமைப்பாளராக அறிமுகமாகாத நிலையில் சாய் அபயங்கர் கையில் ஒரு டஜன் படம் உள்ளதாக கூறப்படுகிறது.இவர் தமிழில் ’டூட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். தொடர்ந்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் திரைப்படத்திலும், சூர்யாவின் ’கருப்பு’ திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார். அல்லு அர்ஜுன் – அட்லி இணையின் பிரமாண்ட திரைப்படத்திலும், லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் உருவாகும் ’பென்ஸ்’ திரைப்படத்திலும் சாய் அபயங்கர் இசையமைக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது இவர் மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘பல்டி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைக்க சாய் அபயங்கர் ரூ.2 கோடி பெற்றுள்ளார். இதன்மூலம் மலையாள திரைத்துறையில் அதிக சம்பளம் பெரும் இசையமைப்பாளர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.இதுகுறித்து ‘பல்டி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சந்தோஷ் டி குருவில்லா பேசியதாவது, ‘அவரது இசை ஆல்பங்கள் இந்த சம்பளத்திற்கு அவர் தகுதியானவர் என்று என்னை நம்ப வைத்தது. ‘பல்டி’ திரைப்படத்தின் முதல் பாடல் இதற்கு சான்றாகும்.மேலும், ‘ஜாலக்காரி’ பாடல் தமிழ்நாட்டில் , குறிப்பாக ரீல்களில் வைரலாகியுள்ளது” என்றார். இதன் மூலம் மலையாள சினிமாவில் பல ஜாம்பவான்கள் பெறாத தொகையை சாய் அபயங்கர் சம்பளமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.