இலங்கை
தாழையடி கடற்பரப்பில் நீந்துவது பேராபத்தானது!
தாழையடி கடற்பரப்பில் நீந்துவது பேராபத்தானது!
வடமராட்சி கிழக்கு தாழையடி கடற்பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள், கடலுக்குள் இறங்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைய நாள்களாக கடும் காற்றுடனான காலநிலை தாழையடியில் நிலவுகின்றது. அத்துடன் கடற்கொந்தளிப்பும் ஆபத்தான மட்டத்தை அடைந்துள்ளது.
இவ்வாறான காரணங்களைக் கருத்திற்கொண்டே கடலுக்குள் இறங்குவதைத் தவிர்க்குமாறும், கடல்விளையாட்டுகளில் ஈடுபடவேண்டாம் என்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களில் சமாசத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.