இலங்கை
தியாகி திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல்!
தியாகி திலீபனின் இறுதிநாள் நினைவேந்தல்!
தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றையதினம் பருத்தித்துறையில் உள்ள அவரது நினைவாலயத்தில், காலை 8 மணிமுதல் அடையாள உண்ணா விரதத்துடன் வடமராட்சி மக்களால் நினைவேந்தப்பட்டது.
மாவீரர்களான புட்சித்தமிழின் பெற்றோரான பரஞ்ஜோதி தவமணியால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களால் மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டது.
இதில் சைவ மதகுருக்கள், பருத்தித்துறை மௌலவி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.