இலங்கை
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் – மன்னாரில்
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் – மன்னாரில்
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் இடம் பெற்றது.
இதன் போது அன்னாரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு,மாலை அணிவிக்கப் பட்டு,மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை