இலங்கை
நுணாவிலில் கோர விபத்து; டிப்பருக்குள் வீசப்பட்டு இளைஞர் துயரச் சாவு!
நுணாவிலில் கோர விபத்து; டிப்பருக்குள் வீசப்பட்டு இளைஞர் துயரச் சாவு!
சாவகச்சேரி நுணாவில் கிழக்குப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தின்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் அருகாகச்சென்ற டிப்பர் மீது தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். மீசாலை புத்தூர் சந்திப் பகுதியைச் சேர்ந்த
திலகீஸ்வரன் ஜதுஸ் (வயது-20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
விபத்துத் தொடர்பில் தெரியவருவதாவது:-
சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற டிப்பரை, அதே திசை யில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்வதற்கு முற்பட்டபோது. எதிரே வந்த இளைஞரின் மோட்டார் சைக் கிளுடன் நேருக்குநேர்மோதுண்டுள்ளார். இரு மோட்டார்சைக்கிள்களும் மோதிய வேகத்தில், அந்த இளைஞர் அருகில் பயணித்த டிப்பர் மீது தூக்கி வீசப்பட்டு, வீதியில் வீழ்ந்துள்ளார். சம்பவ இடத் துக்கு விரைந்த மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர் . இதன்போது, இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டமை உறு திப்படுத்தப்பட்டது.
படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பா ணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சாவகச்சேரிப்பொலி ஸார் மேலதிக விசாரணைகளை மேற்