சினிமா

பஸ்ஸுக்கு கூட காசில்லாமல் இருந்தனாங்க… தனுஷின் பலரும் அறிந்திடாத இன்னொரு பக்கம் இதோ.!

Published

on

பஸ்ஸுக்கு கூட காசில்லாமல் இருந்தனாங்க… தனுஷின் பலரும் அறிந்திடாத இன்னொரு பக்கம் இதோ.!

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகராக, இசையமைப்பாளராக, எழுத்தாளராக, தயாரிப்பாளராக வளர்ந்து வரும் தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், தனது குடும்பம் எப்படி வறுமையிலிருந்து சென்னை வரை வந்தது என்பதை நெஞ்சை உருக்கும் விதமாக பகிர்ந்துள்ளார். இந்த உரை, இன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.தனது உரையில் தனுஷ் கூறியதாவது, “பொழப்பு தேடி சென்னைக்கு வரலாம்னு அப்பா முடிவு பண்ணப்ப, எங்களிடம் பஸ்ஸுக்கு கூட காசு இருக்கல. மதுரையில் இருந்த நம்ம சொந்தக்காரங்க கிட்ட கேக்கலாம்னு நினைச்சாங்க. ஆனா மதுரைக்கு போக கூட காசு இல்ல… அப்பா, அம்மா இருவரும் கிட்டத்தட்ட 120 கிலோமீட்டர் நடந்து போனாங்க. அப்போ செல்வராகவனுக்கு 4 வயசு… அம்மா 3 மாசம் கர்ப்பம்… அந்த நிலைமையிலயும் நடந்து போனாங்க…. இன்று அந்த பாதையில் நானும் நடந்து வாறன். அது என் வாழ்வில் மிகப்பெரிய மேடை.” என்றார். இந்த உரை, பலரது நெஞ்சை தொட்டுள்ளது. ஏனெனில் இது வெறும் ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல. இது வெற்றி என்ற ஒன்று எதனால் அமைகிறது என்பதை விளக்கும் உண்மை கதை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version