சினிமா
பாக்ஸ் ஆபிஸில் புயலை ஏற்படுத்திய “OG”..! முதல் நாள் வசூல் இத்தன கோடியா.?
பாக்ஸ் ஆபிஸில் புயலை ஏற்படுத்திய “OG”..! முதல் நாள் வசூல் இத்தன கோடியா.?
தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகரும், தற்போதைய ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகியுள்ள மிக முக்கியமான திரைப்படம் ‘OG’. படம் வெளியான முதல் நாளிலேயே, 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்கள் மத்தியில் பவன் கல்யாணின் மாஸ் என்ட்ரியாக பார்க்கப்படும் இப்படம், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.பவன் கல்யாணின் முந்தைய திரைப்படமான ‘ஹரிஹர வீரமல்லு’, வரலாற்று அடிப்படையிலான பிரம்மாண்ட முயற்சியாக இருந்தது. ஆனால் பல தொழில்நுட்ப பிழைகள், சிக்கல்கள் மற்றும் எதிர்பார்ப்பு குறைந்த திரைக்கதையால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.அதன்பின்னர் ரசிகர்களிடையே ஒரு “Comeback” எதிர்பார்ப்பு உருவானது. அதற்கேற்பவே ‘OG’ படம் உருவாகி, September 25, 2025 அன்று பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. ‘OG’ படத்தில் பவன் கல்யாண் மிகவும் அக்ரஸிவ் மற்றும் மாஸ் கதாபாத்திரத்தில் களமிறங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.