சினிமா

பாலா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்.. விரைவில் விளக்கம் அளிப்பேன்! நடிகர் அதிரடி கருத்து

Published

on

பாலா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்.. விரைவில் விளக்கம் அளிப்பேன்! நடிகர் அதிரடி கருத்து

நகைச்சுவை நடிகராக திகழும் KPY பாலா குறித்து சமீபத்தில் சமூக ஊடகங்களில் சில குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன. இந்நிலையில் பாலா தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்து இது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதன்போது பாலா, “நான் செய்து வரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன். என்னுடைய வேலையே, என்னிடம் இருப்பதை கடைசி வரை செய்து கொண்டே இருப்பது தான். அது தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவே இல்லை…” என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். மேலும், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் செய்தியாளர்களை சந்தித்து முழுமையான விளக்கம் அளிக்கவிருக்கிறேன் எனவும் பாலா தெரிவித்திருந்தார். அவரது இந்த வரிகள், சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரின் ஆதரவையும் பெற்றுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version