இந்தியா

புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்… 5 பொருள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு; அரசு அறிவிப்பு

Published

on

புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்… 5 பொருள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு; அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் 5 பொருட்கள் அடங்கிய தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலை பருப்பு, 2 கிலோ சமையல் எண்ணெய், அரை கிலோ ரவை, அரை கிலோ மைதா வழங்கப்படும் என்றும், கௌரவ அட்டைதாரர்கள், அரசு ஊழியர்கள் தவிர அனைத்து அட்டைதார‌ர்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசுத் தொகுப்பு, கௌரவ அட்டைதாரர்கள் மற்றும் அரசு ஊழியர்களைத் தவிர்த்து, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் இந்த நலத்திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தீபாவளி பண்டிகை காலத்தில் சிறிய அளவிலாவது நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு இலவச பொருட்கள் தர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் கான்பெட் கூட்டுறவு நிறுவனம் செய்துவருகிறது. இதுதொடர்பாக கான்பெட் நிர்வாக இயக்குநர் அய்யப்பன் டென்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- புதுச்சேரியில் தீபாவளிக்கு அனைத்து முழுக்க ரேஷன்கார்டுகளுக்கும் மளிகை பொருட்கள், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக விநியோகம் செய்யப்படவுள்ளது. அதற்காக குறுகிய கால மின்டெண்டர் விடப்படுகிறது.  டெண்டர் எடுக்க விரும்புவோர் வருகிற 3-ந்தேதி மாலைக்குள் விண்ணப் பிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச சர்க்கரை மட்டும் வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சர்க்கரையுடன் கூடுதலாக மளிகை பொருட்கள், எண்ணெய் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சர்க்கரை, எண்ணெய்யுடன் கடலைப்பருப்பு உள்ளிட்ட 5 மளிகை பொருட்கள் வழங்க முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் திருமுருகனும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்த பொருட்களை எந்த அளவு வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்கள். இதற்கான அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி விரைவில் வெளியிடுவார் என தெரிகிறது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version