இலங்கை

பேத்திக்கு சோறு ஊட்டிய பாட்டியின் நகை கொள்ளை

Published

on

பேத்திக்கு சோறு ஊட்டிய பாட்டியின் நகை கொள்ளை

 மொனராகலை, சிரிவிஜயபுராவில் பேத்திக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்த பாட்டியின் தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் ஒருவர் அபகரித்துச் சென்றுள்ள சம்பவம், இடம்பெற்றுள்ளது.

தனது குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை அணுகிய இரண்டு இளைஞர்களில் ஒருவர், அவரது மொபைல் போனில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, அவரைத் தெரியுமா என்று கேட்டனர்.

Advertisement

அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, ​​அந்த இளைஞர் உடனடியாக அவரது கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துக்கொண்டு, தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்.

கொள்ளயடிக்கப்பட்ட தங்க நகையின் மதிப்பு சுமார் 2 இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் என அறியமுடிகின்றது.

சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்திய பொலிஸார் , அந்த இளைஞன் பிபில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version