இலங்கை

முக்கிய ஐந்து நிறுவனங்களில் ஊழலிற்கு மேல் ஊழல்! ஊழல் ஆணைக்குழுவின் தலைவர்

Published

on

முக்கிய ஐந்து நிறுவனங்களில் ஊழலிற்கு மேல் ஊழல்! ஊழல் ஆணைக்குழுவின் தலைவர்

சுங்கம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி திணைக்களம், மதுவரித் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் வாகனப் பதிவு அலுவலகம்,. போன்ற அலுவலகங்களில் ஊழலிக்கு மேல் ஊழல் இடம்பெறுகின்றன என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற ஒரு விரிவுரை ஒன்றின் போதே அவர் இந்தனைக் குறிப்பிட்டார்.

Advertisement

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம். அதில், மக்கள், இலஞ்சம், ஊழலுக்கு ஆளாகக்கூடிய நிறுவனங்களாகத் தேர்ந்தெடுத்த 10 நிறுவனங்கள்.

 பொலிஸ், அரசியல், சுங்கம். குடிவரவு குடியகல்வுத் துறை, பாடசாலை அமைச்சு. காணிப் பதிவு அலுவலகங்கள், மாகாண சபைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பிரதேச செயலகங்கள், பதிவாளர் நாயக அலுவலகம் போன்றவை பொதுமக்களின் கருத்தாகும். 

Advertisement

 இருப்பினும், பொருளாதாரத்தை முக்கியமாக பாதிக்கும் 5 நிறுவனங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். 

 ஒன்று சுங்கம், இரண்டாவது நிறுவனம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி திணைக்களம். 

 மதுவரித் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் வாகனப் பதிவு அலுவலகம்.
இது போன்ற நிறுவனங்கள் மூலம் ஊழல் பரவலாம். இது போன்ற நிறுவனங்களில் ஊழலிக்கு மேல் ஊழல் இடம்பெறுகின்றன. 

Advertisement

அவற்றின் மூலம், ஊழல் செய்பவர்களுக்கு ஒரு புகலிடம் உருவாக்கப்பட்டு, பணமோசடிக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பின்னர், நான் குறிப்பிட்ட கணக்கெடுப்பில், ஊழல் கலாச்சாரத்திற்கு பங்களிக்கும் காரணிகளாக பொதுமக்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version