இலங்கை

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! 12 பேர் படுகாயம்

Published

on

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! 12 பேர் படுகாயம்

பண்டாரகம-களுத்துறை வீதியில் வேவிட்ட பகுதியில் லொறி, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தொன்றில் 12 பேர் காயமடைந்தனர்.

 நடனக் குழுவைச் சேர்ந்த பத்து பேர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் காயமடைந்தவர்களில் அடங்குவதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

 காயமடைந்தவர்களில் ஏழு பேர் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து பேர் மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 மொரந்துடுவவிலிருந்து பண்டாரகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி மீது, எதிர் திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதிய நிலையில், லொறியின் சாரதி உடனடியாக பிரேக் போட்டதால் லொறியின் பின்னால் வந்த வேன் லொறியின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

 விபத்தைத் தொடர்ந்து லொறியின் சாரதி அப்பகுதி மக்களால் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

 வேனில் பயணித்த நடனக்குழு வஸ்கடுவ, பொதுப்பிட்டியிலிருந்து சிலாபத்திற்கு பெரஹெர ஒன்றுக்கு சென்றுக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கிளினிக் வந்து மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இந்த விபத்து காரணமாக பண்டாரகம-களுத்துறை வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version