இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

Published

on

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

   தமிழ் மக்களுக்காய் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் மதியம் 12 மணிக்கு ஆரம்பித்ததுடன், பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version