பொழுதுபோக்கு
வருத்தம், வறுமை, மனிதாபிமானமற்ற தன்மை… பாலியல் தொழிலாளர்களின் பின்னணியை சொல்லும் ஆவணப்படங்கள்; யூடியூப்பில் இருக்கு!
வருத்தம், வறுமை, மனிதாபிமானமற்ற தன்மை… பாலியல் தொழிலாளர்களின் பின்னணியை சொல்லும் ஆவணப்படங்கள்; யூடியூப்பில் இருக்கு!
பாலியல் தொழிலாளர்களில் வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணப் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கேட்ஜ்டு அண்டில் ப்ரோக்கன் (Caged until broke)மும்பையின் காமதிபுரா மாவட்டத்தில் கடத்தப்பட்ட இளம் பெண்களின் வாழ்க்கையை இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கிறது. இதனை பத்திரிகையாளர் ஹேசல் தாம்சன் படமாக்கியுள்ளார். பாலியல் தொழிலாளியின் வலிகள் இந்த ஆவணப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது. இந்த அவணப்படமானது யூடியூபில் காணக்கிடைக்கிறது.டான்ஸ், செக்ஸ், டான்ஸ் (Dance, sex, dance)இந்த ஆவணப்படமானது முஜ்ராக்கள் என்று அழைக்கப்படும் நடன நேர நிகழ்ச்சிசியை எடுத்துரைக்கிறது. அதாவது பாரம்பரிய பழக்கவழக்கங்களிலிருந்து நவீன கால பாலியல் அடிமைத்தனத்திற்கு ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்துகிறது. இந்த ஆவணப்படத்தை ரெட்டிட் தளத்தில் காணலாம்.பார்ன் இன் டூ பிராத்தல்ஸ் (Born into Brothels)இந்த ஆவணப்படம் கொல்கத்தாவில் விபச்சார விடுதிகளில் வளர்க்கப்படும் குழந்தைகள் குறித்து பேசுகிறது. இந்த ஆவணப்படமானது ஒரு அகாடமி விருதும் வென்றுள்ளது.வோர்ஸ் க்ளோரி (Whores’ glory)இந்த ஆவணப்படம் தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் மெக்சிகோவில் உள்ள சிவப்பு விளக்கு மண்டலங்களை வரிசைப்படுத்துகிறது. இது பாலியல் தொழிலாளர்களின் மீள்தன்மை, வருத்தம், கனவுகள் மற்றும் கண்ணியத்திற்கான தேடலை ஆராய்கிறது. இந்த ஆவணப்படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.தி பிராஸ்டியூட்ஸ் ஆஃப் தெளலதியா (The Prostitutes of Daulatdia)இந்த ஆவணப்படம் உலகின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு மாவட்டமான தௌலதியாவை மையமாகக் கொண்டது. இது கடத்தல், தீவிர வறுமை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை ஆராய்கிறது. இந்த ஆவணப்படத்தை ஐ.எம்.டி-யில் காணலாம்.சோல்ட் இன் அமெரிக்கா (Sold in America)இந்த ஆவணப்படமானது பாலியல் தொழிலாளர்கள் என்னென்ன சவால்களை சந்திக்கிறார்கள் என்பது காட்சிப்படுத்துகிறது. இந்த ஆவணப்படத்தை ஐ.எம்.டி-யில் பார்க்கலாம்.பையிங் செக்ஸ் (Buying sex)இந்த ஆவணப்படம் விபச்சாரச் சட்டங்கள் பற்றிய விவாதங்களை எடுத்துரைக்கிறது. இதில் பாலியல் தொழிலாளர்கள், சட்ட வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் வாங்குபவர்களின் குரல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆவணப்படத்தை ஐ.எம்.டி-யில் பார்க்கலாம்.