சினிமா
விஜய்யின் “ஜனநாயகன்” 800 கோடி வசூலிக்கும்… பிரபல நடிகர் சொன்ன உண்மை.!
விஜய்யின் “ஜனநாயகன்” 800 கோடி வசூலிக்கும்… பிரபல நடிகர் சொன்ன உண்மை.!
தளபதி விஜய் தற்போது நடித்து வரும் புதிய திரைப்படம் “ஜனநாயகன்”, தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதாலேயே, ரசிகர்களிடையே அபார ஆர்வம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநராக எச். வினோத் செயல்படுகிறார். சினிமா, அரசியல், மக்கள் விருப்பம் என மூன்றையும் இணைக்கும் ஒரு பில்டப்பாக ‘ஜனநாயகன்’ தற்போது தமிழ்நாட்டு சினிமா வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வந்த பின்பு, குறைந்தபட்சம் 800 கோடி வசூலிக்கும் என நடிகரும், இயக்குநருமான நட்டி தற்பொழுது உறுதியுடன் கூறியுள்ளார். அவரது இந்த நம்பிக்கை, விஜய் ரசிகர்கள் மற்றும் படத்தின் பங்காளர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.நட்டி கூறியதாவது, “இது விஜய்யின் கடைசி படம். அதனாலேயே ரசிகர்கள் பீக்கு வரும். ஸ்டைல், விஜயிஸம், அசுர வைக்கும் தருணங்கள் எல்லாம் இந்த படத்தில் இருக்கும். அதனாலேயே இந்த படம் 800 கோடி வசூல் பண்ணும்.” என்றார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.