சினிமா

வெளியானது “Avatar Fire and Ash” படத்தின் புதிய ட்ரெய்லர்! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வீடியோ

Published

on

வெளியானது “Avatar Fire and Ash” படத்தின் புதிய ட்ரெய்லர்! எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வீடியோ

ஹாலிவுட் திரைப்பட உலகத்தில் ரசிகர்களை கவர்ந்தெடுத்த மற்றும் உலகம் முழுவதும் வசூலை குவித்த திரைப்படமாக “Avatar” இடம் பெற்றது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதன் இரண்டாம் பாகமான “Avatar: The Way of Water” கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தற்போது உருவாக்கியுள்ள மூன்றாவது பாகம் “Avatar: Fire and Ash” என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.”Avatar 3: Fire and Ash” திரைப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில், கடந்த இரு பாகங்களை விட கூடுதலான VFX காட்சிகள் மற்றும் பின்னணி தொழிநுட்ப காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version