பொழுதுபோக்கு
43 வருஷ நட்பு, என்னை விட நளினி என் மகளுக்கு நெருக்கம்; மனம் திறந்த வில்லி நடிகை!
43 வருஷ நட்பு, என்னை விட நளினி என் மகளுக்கு நெருக்கம்; மனம் திறந்த வில்லி நடிகை!
என் மகளுக்கும் நளினிக்கும் ஒரே நாளில் பிறந்த நாள். அதனால் என்னைவிட அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் அதிகம் என்று நடிகை நளினியுடனான தனது 43 ஆண்டுகால நட்பு குறித்து நடிகை சாதனை நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.தமிழ் சினிமா, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய நடிகைதான் நளினி. இவர் 1980களில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக இருந்தார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நளினி, ராமராஜனை திருமணம் செய்து பின்னர் 2000ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.அதேபோல், 1982-ம் ஆண்டு ஹிட்லர் உமாநாத் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாதனா, அதனைத் தொடர்ந்து நானும் ஒரு தொழிலாளி, மை டியர் லிசா, என்ன பெத்த ராசா, வெற்றி கரங்கள், நெஞ்சினிலே, சினேகிதியே, புதிய கீதை தொட்டி ஜெயா உள்ளிட்ட பல வெற்றிபடங்களில் நடித்திருந்த இவர், கடைசியாக நினைத்தது யாரோ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் சாதனா, ஜீ தமிழின் மாரி சீரியிலில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.இதனிடையே நளினி சாதனா இருவரும், ஓவிய கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பங்கேற்றிருந்த நிலையில், அப்போது அளித்த பேட்டியில் தங்கள் இருவருக்கும் இடையேயான நட்பு குறித்து இருவரும் சிலாகித்து பேசியுள்ளனர். இந்த நட்பு குறித்து பேசிய நளினி, இந்த நட்புக்கு, சாதனாவின் பாட்டிக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அவர் சாதனாவை யாருடனும் பழக விடமாட்டார். அவருக்கு பிடித்தது நான் மட்டும் தான். எந்த நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார் என்ற நளினி கூறியுள்ளார்.ரஜினிகாந்த் பற்றி கூறுகையில், அவர் தான் சூப்பர் ஸ்டார். 50 வருடம் என்பது யாருக்கும் அமையாது. அவர் வேண்டாம் வேண்டாம் என்ற சொன்னாலும், நாம் அவரை அழைத்து வந்து கொண்டாடுகிறோம். 50 வருடம் என்பது இனி யாருக்கும் அமையப்போவது இல்லை என்ற கூறியுள்ளார். தொடர்ந்து சாதனா பற்றி பேசிய நளினி, எங்களுக்குள் 43 வருட நட்பு. அவள் எங்கு கூப்பிட்டாலும் நான் போவேன். நான் எங்கு கூப்பிட்டாலும் அவள் வருவாள். எனது வளர்ப்பு பெண் நந்தினியும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறாள். புடவை கண்காட்சி என்றால் முந்திரி கொட்டை மாதிரி போவாள். ஆனால் இதற்கும் வந்திருக்கிறாள். சாதனா பேசும்போது என் மகளின் பிறந்த நாளும் நளினியின் பிறந்த நாளும் ஒரே நாள். இதனால் அவர்கள் இருவருக்கும் பிணைப்பு அதிகம் என்று கூறியுள்ளார்.