விளையாட்டு

IND vs SL LIVE Score: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்

Published

on

IND vs SL LIVE Score: ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை? இந்தியாவுடன் இன்று மோதல்

IND vs SL T20 Match Live Score: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன.லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தற்போது இந்த அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். இதில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் 3 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபாயில் நடக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறும் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா சூப்பர் 4 சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ய ஆர்வம் காட்டும். அதேநேரத்தில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாத இலங்கை ஆறுதல் வெற்றிக்கு போராடும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version