பொழுதுபோக்கு

அவைத்தலைவர் ஆன தேவா; ஆஸ்திரேலியாவில் கிடைத்த ராஜமரியாதை: சாதனை படைத்த தேனிசை தென்றல்!

Published

on

அவைத்தலைவர் ஆன தேவா; ஆஸ்திரேலியாவில் கிடைத்த ராஜமரியாதை: சாதனை படைத்த தேனிசை தென்றல்!

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தேவா, பாடகராகவும் முத்திரை பதித்துள்ள நிலையில், அவருக்கு ஆஸ்திரேலியாவில் உயரிய கவுரவம் கிடைத்துள்ளது.1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தொடர்ந்து 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகராசா படத்தின் மூலம் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வளர்ந்த இவர், அடுத்து தனது 3-வது படமாக வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களை துள்ளி விளையாட வைக்கும் அளவுக்கு பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.அதனைத் தொடர்ந்து, ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, சரத்குமாருக்கு சூரியன், வேடன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தேவா,  இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் முத்திரை பதித்துள்ளார். தேவா, ஒரு சில படங்களில் இசைமைப்பாளர் தேவாவாகவே வந்து நடித்திருப்பார். இதனிடையே தேவாவின் இசை பயணத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம் பாராட்டி கவுரவித்துள்ளது.ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை தரப்பட்டு, அவைத்தலைவர் இருக்கையில் அமரவும் வாய்ப்பு அளிக்கப்பட்டு, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கி கவுரவித்துள்ளனர். இதனால் மகிழ்ச்சியில் உச்சத்தில் இருந்து பேசிய தேவா,  ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை பெருமை அளிக்கிறது. எனக்கும் எனது இசைக்கலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கவுரவத்தை வழங்கியதற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.இந்தத் தருணம் எனக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் கலாசாரத்தைப் பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.எனது 36 ஆண்டுகால இசைப் பயணத்தில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான் என் பலம். இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார். ரஜினிகாந்த், தொடங்கி விஜய் வரை பல நடிகர்களுக்கு தனது இசையின் மூலம் ஹிட்களை கொடுத்த தேவா தற்போது பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version