இலங்கை

இலங்கை தேயிலையின் கின்னஸ் சாதனை

Published

on

இலங்கை தேயிலையின் கின்னஸ் சாதனை

இலங்கை தேயிலையின் உலகளாவிய நற்பெயரை மேலும் மேம்படுத்தும் வகையில், நியூ விதானகந்தே தேயிலை தொழிற்சாலையின் சிலோன் பிளாக் டீ (FFExSp) இதுவரை விற்பனை செய்யப்பட்ட மிகவும் விலையுயர்ந்த தேயிலையாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.

ஜப்பானில் நடந்த ஏலத்தில் இந்த வகை தேயிலை ஒரு கிலோகிராம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதை அடுத்து இந்த சாதனை அடையப்பட்டுள்ளது.

Advertisement

இந்த குறிப்பிடத்தக்க சாதனை குறித்து கருத்து தெரிவித்த நியூ விதானகந்தே தேயிலை தொழிற்சாலையின் தலைமை செயற்பாட்டு அதிகாரி புபுது குணசேகர, “இது நியூ விதானகந்தேவின் சாதனை மட்டுமல்ல, இலங்கை தேயிலையின் ஒப்பற்ற தரம், பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனுக்கான உலகளாவிய வெளிச்சம்” என்றார்.

“இந்த நம்பமுடியாத சாதனைக்குப் பின்னால் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது இலங்கைக்கு பெருமை சேர்க்கும் தருணம் மற்றும் நமது உள்ளூர் சிறப்பை உலக அளவில் அங்கீகரிக்க முடியும் என்பதை நினைவூட்டுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.

Advertisement

இந்த கின்னஸ் உலக சாதனை இலங்கையின் முக்கிய ஏற்றுமதியான தேயிலைக்கான சர்வதேச சந்தையில் ஒரு புதிய உத்வேகத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version