சினிமா

குடலில் பிரச்சனை..மருத்துவமனையில் தாடி பாலாஜி!! பிரபலம் சொல்வது உண்மையா?

Published

on

குடலில் பிரச்சனை..மருத்துவமனையில் தாடி பாலாஜி!! பிரபலம் சொல்வது உண்மையா?

விஜய் தொலைக்காட்சியில் காமெடி ஷோக்களில் நடுவராக பணியாற்றியும், பல படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் தாடி பாலாஜி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாடி பாலாஜி, தற்போது நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.இந்நிலையில் தாடி பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்று பிரபல பத்திரிக்கையாளர் சே குவாரா அளித்த பேட்டியொன்றில் அனைவரது கவனத்தை ஈர்த்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதில், தாடி பாலாஜி வயிற்று வலி காரணமாகவே ஒரு மாதத்திற்கு மேலாக அவதிப்பட்டுள்ளார்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் நான் போனில் பேசி விசாரித்தபோது அவர்ம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மைதான், குடல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், எம் ஆர் ஐ ஸ்கேன் எடுத்து இருப்பதாகவும் கூறினார்.எந்த மருத்துவமனையில் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு வேண்டாம் யாருக்ம்கும் தெரியவேண்டாம். ஏனென்றால், நண்பர்கள் இருக்கிறார்கள், தவெக தொண்டக்ரள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் கூடிவிடுவார்கள் என்றும் நான் நலமாக இருப்பதாகவும் தாடி பாலாஜி கூறினார்.கடந்த இரு ஆண்டுகளாகவே தாடி பாலாஜி குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று கூறினார். ஆனால் அதன்பின் குடித்ததன் விளைவாக தற்போது பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம், ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தரப்பினரிடம் கேட்கப்பட்ட போது, விஜய்க்கு உருக்கமான ஒரு கடிதம் அனுப்பியதாகவும், விஜய் கையில் கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. தாடி பாலாஜி பலருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். ஆனால் அவர் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை.பாலா தான் செய்த உதவியை விளம்பரப்படுத்தி கொண்டதால் தான் இவ்வளவு பெரிய சிக்கலில் சிக்கியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் பலரும் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்கிறார்கள். அந்த தொலைக்காட்சியில் பிரபலமாக உச்சத்தில் இருப்பவர்கள் தற்போது ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகிறார்கள். அந்த சேனலின் ராசி அப்படி போலம் ஒன்று விவாகரத்தாகிறது, இல்லை என்றால் உயிரிழந்து விடுகிறார்கள், கண் திருஷ்டி பட்டிருக்கிறது அந்த சேனலுக்கு என்று சே குவாரா தெரிவித்துள்ளார்.பொறுப்பு துறப்பு : இந்த செய்தியில் பதிவிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பத்திரிக்கையாளர் சேகுவாரா பகிர்ந்து கொண்ட தகவல்தானே தவிர விடுப்பு தளத்திற்கு அவரின் கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version