இலங்கை

கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளுக்கு சஜித் அஞ்சலி

Published

on

கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளுக்கு சஜித் அஞ்சலி

   குருணாகல் மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனவில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்து விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்களுக்கு இன்று (27) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அண்மையில் ஏற்பட்ட இந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் உயிரிழந்தனர். மேலும் சில பிக்குகள் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இத்துயர் சம்பவத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்கள் மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பிற்பாடு, ஆரண்ய சேனாசனத்தின் சங்கைக்குரிய தலைமை தேரரைச் சந்தித்து சஜித் பிரேமதாச கலந்துரையாடினார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version