இலங்கை

கைது செய்யப்படுகிறா விஜய்? எழுந்துள்ள கோரிக்கை

Published

on

கைது செய்யப்படுகிறா விஜய்? எழுந்துள்ள கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய் கைது செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் மரணம், நடிகர் விஜயை கைது செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கரூரில் இன்று நடைபெற்ற தவெக தலைவர் விஜய் அவர்களின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள், ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அங்கிருந்து வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது  

தமிழக அரசியல் வரலாற்றில் கறுப்பு தினமாக அமைந்த இந்நாளில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள், அத்துடன் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தோர் குடும்பத்தினருக்கு இதுவரை ஒரு அனுதாப, ஆறுதல் செய்தி கூட வெளியிடாமல் இருப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற நேரில் செல்ல முயற்சி செய்யாத நடிகர் விஜய் அவர்களுக்கு கடும் கண்டனங்கள்.

Advertisement

அண்டை மாநிலமான ஆந்திராவில் புது திரைப்பட வெளியீட்டு சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் மரணமடைந்த போது அப்படத்தின் கதாநாயகனான நடிகர் அல்லு அர்ஜுனா கைது செய்யப்பட்டது போல் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைய காரணமாக இருந்த பிரச்சார கூட்டத்தின் கதாநாயகனான நடிகர் விஜய் அவர்களும் கைது செய்யப்பட்டு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version