சினிமா
சென்சேஷனல் இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ
சென்சேஷனல் இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ
கடந்த ஆண்டு வெளிவந்த ‘கட்சி சேர’ எனும் ஆல்பம் பாடல் மூலம் பிரபலமானவர் சாய் அப்யங்கர். இவர் பின்னணி பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணியின் மகன் ஆவார்.முதல் ஆல்பம் பாடல் மூலமாக பிரபலமான இவர் தொடர்ந்து தனது ஹிட் பாடல்களை Youtube-ல் வெளியிட்டு அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அட்லீ, அல்லு அர்ஜுன் படம், கருப்பு, டியூட், பென்ஸ், மார்ஷல் என பல திரைப்படங்களில் இவரை கமிட் செய்தனர்.இவருடைய இசையில் ஒரு படம் கூட வெளிவரவில்லை, அதற்குள்ள இத்தனை பட வாய்ப்புகளா? இது முற்றிலும் PR ஒர்க் என பல விமர்சனங்கள் எழுந்தன.இன்று சாய் அப்யங்கர் இசையில் உருவான முதல் படம் ‘பல்டி’ திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இளம் சென்சேஷனல் இசையமைப்பாளராக இருக்கும் சாய் அப்யங்கரின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இவர் ஒரு படத்திற்காக ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.