இலங்கை
சொகுசு கார் விபத்தில் மருத்துவருக்கு நேர்ந்தகதி
சொகுசு கார் விபத்தில் மருத்துவருக்கு நேர்ந்தகதி
பிலியந்தல, ஜாலியகொட பகுதியில் சொகுசு சிற்றூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மருத்துவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்த மருத்துவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலயில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சிற்றூந்து வீதியை விட்டு விலகி, கடைத்தொகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கனமழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த பொலிஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.