வணிகம்
தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு: சவரன் ரூ.85,000-ஐ தாண்டியது- புதிய உச்சத்தில் வெள்ளி
தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு: சவரன் ரூ.85,000-ஐ தாண்டியது- புதிய உச்சத்தில் வெள்ளி
உலக அளவில் நிலவும் போர் பதற்றம், பல்வேறு நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால், இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்றே, ஒரு சவரன் தங்கம் ரூ.82,000-ஐத் தாண்டி வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. இந்த விலை உயர்வு தற்போது தொடர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.ஒரு சவரன் ரூ.85,120-க்கு விற்பனை!வார இறுதி நாளான இன்று (சனி, செப்டம்பர் 27, 2025) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.இன்று கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், சவரனுக்கு ரூ.720 அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் மீண்டும் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் (செப். 22 மற்றும் 23) காலை, மாலை என இருவேளையில் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனையான நிலையில், மீண்டும் அதே உச்சத்தை இன்று எட்டியுள்ளது.வெள்ளி விலையும் புதிய உச்சத்தில்!தங்கத்துடன் போட்டியிட்டு வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.இன்று கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.159-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து, பார் வெள்ளி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.