சினிமா

தாறுமாறு தக்காளி சோறு… இன்ஸ்டாவில் கிளாமர் லுக்கில் இளசுகளைக் கவர்ந்த ரம்யா பாண்டியன்.!

Published

on

தாறுமாறு தக்காளி சோறு… இன்ஸ்டாவில் கிளாமர் லுக்கில் இளசுகளைக் கவர்ந்த ரம்யா பாண்டியன்.!

தமிழ் சினிமாவில் அழகு, தனித்துவமான நடிப்பு, மற்றும் சுதந்திரமான கொள்கைகள் என்பன மூலம் நடிகையாக பலரும் மதிக்கின்றவர் ரம்யா பாண்டியன். ஒவ்வொரு தோற்றத்திலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிற அவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய சாறி லுக் புகைப்படங்கள் மூலம், மீண்டும் ஒரு முறை இணையத்தை கலக்கி வருகிறார்.ரம்யா தனது சமீபத்திய புகைப்படத் தொகுப்பில், மிக அழகான, ஸ்டைலிஷ் சாறி அணிந்து கிளாமர் லுக்கில் காட்சியளிக்கிறார்.இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் “she looks beautiful..!! ” என்று கமெண்ட்ஸ் தெரிவித்துள்ளனர். ரம்யா பாண்டியன் தனது திரையுலக பயணத்தை எளிமையாகத்தான் ஆரம்பித்தார். ஆனால் தனது தேர்வுகள், திரைத்துணிவுகள், மற்றும் தன்னம்பிக்கை நிறைந்த சிறப்பான நடிப்பு பாணி மூலம், ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்றுக் கொண்டார்.பெரும்பாலும் குடும்ப பின்னணியில்லாமல் சினிமா உலகில் வந்த பெண்கள், தங்களது திறமையை நிரூபிக்க ஒரு பெரிய போராட்டத்தை கடந்து வரவேண்டும். ரம்யாவும் அப்படித்தான்! பட வாய்ப்புகள் குறைந்து, ரம்யாவின் திரைப் பயணம் ஒரு இடைவெளியில் இருந்த நேரத்தில், அவர் ஒரு துணிச்சலான முடிவாக, விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.‘பிக் பாஸ்’ அனுபவத்துக்குப் பிறகு, அவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருந்தார். இந்த ரியாலிட்டி ஷோவிற்குப் பிறகு, ரம்யாவுக்கு பட வாய்ப்புகள் மீண்டும் குவியத் தொடங்கின.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version