இலங்கை
நாடாளுமன்ற பிரதி பணிப்பாளர் மப்ருக் மர்சூக் இற்கு பதவிக்கு உயர்வு
நாடாளுமன்ற பிரதி பணிப்பாளர் மப்ருக் மர்சூக் இற்கு பதவிக்கு உயர்வு
நாடாளுமன்றத்தின் பிரதி பணிப்பாளராக (நிர்வாகம்) பணியாற்றிய மப்ருக் மர்சூக், பாராளுமன்ற நிர்வாக பணிப்பாளர் பதவிக்கு உயர்வு பெற்றுள்ளார்.
பிரதி பணிப்பாளராக (நிர்வாகம்) நியமிக்கப்படுவதற்கு முன்பு, பொது மனுக்கள் குழுவின் உதவி பணிப்பாளராக பணியாற்றினார்.
நாடாளுமன்ற நிர்வாக பணிப்பாளர் பதவியில் இருந்து உதய முனசிங்க சமீபத்தில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு மப்ருக் மர்சூக் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.