இலங்கை

பருத்தித்துறை நகர சபையின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து

Published

on

பருத்தித்துறை நகர சபையின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து

  யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் அலட்சியத்தால் தண்ணீர் வண்டியின் சக்கரம் ஒருபுறமாகவும் தண்ணீர்த் தாங்கி மறுபுறமாகவும் தடம் புரண்டுள்ளது.

இன்றைய தினம் பருத்தித்துறை நகர சபைக்கு சொந்தமான தண்ணீர்த் தாங்கி காலை முதல் இயந்திர சக்கர கோளாறு காரணமாக இருந்தது.

Advertisement

எனினும் வண்டி சாரதி மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக கோளாறுடன் இருந்த வண்டியை எடுத்து பருத்தித்துறை நகர பகுதி முழுவதும் கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது   தண்ணீர் வண்டி பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதி வழியாக கொண்டு செல்லும் போது சக்கரம் முன்பாகவும் வண்டி புறமாகவும் சென்றுள்ளது.

பாடசாலை செல்லும் மாணவர்கள், பேருந்துகள் வீதி வழியாக வருகை தந்திருந்தால் விபத்தினால் பாரியளவு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என பிரசேத மக்கள் கூறுகின்றனர்.   

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version