சினிமா
பார்சிலோனாவில் குடும்பத்துடன் Chill பண்ணும் அஜித்..! இன்ஸ்டாவில் வைரலான போட்டோஸ்.!
பார்சிலோனாவில் குடும்பத்துடன் Chill பண்ணும் அஜித்..! இன்ஸ்டாவில் வைரலான போட்டோஸ்.!
தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல் ஒரு ஸ்போர்ட்ஸ்மேனாகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் அஜித் குமார். ஸ்டைலிஷான தோற்றம், தன்னம்பிக்கையான நடை, சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் சரியான சமநிலையை வைத்திருக்கும் இவரைப் பற்றி எப்போதும் பேசத்தக்க விஷயங்கள் பல உண்டு. சமீபத்தில், அவரது குடும்பத்துடன் எடுத்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அஜித் குமார் தற்போது தனது அடுத்த ரேஸிங் அனுபவத்திற்காக ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனக்கென நேரத்தை ஒதுக்கி, ரேஸிங் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.ஆனாலும், இந்த பயணம் வேறொரு காரணத்தினாலும் சிறப்பாக மாறியுள்ளது. அதாவது, அவரது மனைவி ஷாலினி, மகள் மற்றும் மகன் அவருடன் இணைந்து அங்கு சென்றுள்ள புகைப்படங்கள் எடுத்துள்ளனர் .அந்த புகைப்படத்தில் அனைவரும் ஸ்டைலிஷான லுக்கில், மிக எளிமையான தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். அஜித் தனது ஸ்டைலிஷ் ரேஸிங் ஆவுட்ஃபிட்டில் இருந்தார். பக்கத்தில் ஷாலினி, எப்போதும் போல அழகான சிரிப்புடன், குழந்தைகளை தத்தம் பக்கத்தில் நிறுத்தி வைத்தபடி போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியானதும், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அதை விரைவில் வைரலாக்கினர்.