பொழுதுபோக்கு
லோகா சாப்டர் 2: உறுதி செய்த துல்கர் சல்மான், சர்ப்ரைஸ் வில்லன் யார்? டீசர் அப்டேட்!
லோகா சாப்டர் 2: உறுதி செய்த துல்கர் சல்மான், சர்ப்ரைஸ் வில்லன் யார்? டீசர் அப்டேட்!
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற லோகா சாப்டர் 1 சந்திரரா திரைப்படம், 2-ம் பாகம் விரைவில் தயாராகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தில் யார் நடிக்க உள்ளார்கள் என்பது தொடர்பான டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில், வெளியான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெற்ற வரவேற்பு யாரும் எதிர்பாராத ஒன்று. உலகளவில் இந்த படம் ரூ280 கோடிக்கும் மேல் வசூலித்து, நாட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கான ஒரு புதிய தரத்தை நிர்ணயித்துள்ளது. முதல் பாகத்தின் இந்த மாபெரும் வெற்றி உத்வேகத்தைப் பயன்படுத்தி, இப்போது படக்குழு அடுத்த பாகத்தின் வெளியீட்டுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.அதன் ஒரு பகுதியாக, நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் இடம்பெறும் ஒரு சிறிய டீஸர் போன்ற வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீஸரில், டொவினோவும் துல்கரும் தரையில் அமர்ந்து சோர்வுடன் மது அருந்துகின்றனர். மைக்கேல் (டொவினோ) பேச்சு கொடுக்க முயற்சி செய்கிறார், ஆனால் சார்லி (துல்கர்) துளியும் ஆர்வம் காட்டவில்லை. கதையின்படி, சார்லி ஒரு ஓடியன் (கேரள நாட்டுப்புறக் கதைகளில் வரும் பாதி மனிதன்-பாதி மிருகம் போன்ற கதாபாத்திரம்), மைக்கேல் ஒரு சட்டான் (பூதம்/கோப்ளின்).மைக்கேல், து லைவ் அமாங் அஸ் (‘They Live Among Us’) என்ற புத்தகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, “ஹிட்லரைக் கொன்றது நீதானா?” என்று சார்லியைத் தொந்தரவு செய்கிறார். அவர் மேலும், “இதைப் படித்தாயா? இது நம்மளைப் பற்றியது. முதல் அத்தியாயம் அவளைப் பற்றியது, காளியங்காட்டு நீலி. என் பெண்! இரண்டாம் அத்தியாயம் என்னைப் பற்றியது” என்று சொல்கிறார்.பின்னர், மைக்கேல் தன் அண்ணனைப் பற்றிப் பேசுகிறார். இந்த அண்ணன் கதாபாத்திரம் இன்னும் குறித்து எந்த அறிமுகமும் இல்லை. தன் அண்ணனை ஒரு “வன்முறை”யான சக்தி என்று அவர் விவரிக்கிறார். மேலும், சார்லி கூட அந்த அண்ணனுடன் மோதத் தயங்குகிறார், ஏனெனில் அவர் ஒரு “பைத்தியக்காரன்” (insane guy) என்கிறார். இந்த அறியப்படாத கதாபாத்திரம்தான் அடுத்த படத்தின் முக்கிய வில்லனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு, தன் வாட்களுடன் அங்கிருந்து கிளம்பும் முன், சார்லி, “எந்த அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள நான் வருவேன்” என்று உறுதியளிக்கிறார்.இது அடுத்த பாகத்தில் அவருக்கு ஒரு முக்கியப் பங்கு இருப்பதையும் உறுதி செய்கிறது. டொவினோ தாமஸ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் அடுத்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு எந்தெந்த கேரக்டர்கள் திரும்ப வருவார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ‘சாப்டர் 1: சந்திரா’ படத்தின் முடிவில், தேவைப்பட்டால் திரும்பி வருவதாக சந்திரா உறுதியளித்திருந்தார். எனவே, அவரும் 2ம் பாகத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது.