பொழுதுபோக்கு

100-ல் 99 படம் பாத்துட்டேன், அந்த ஒரு படம் பார்க்க 4 மணி நேரம் ட்ராவல்; ஆனா அது சிவாஜிக்கு தோல்வி படம்: சுந்தர்ராஜன் ஓபன் டாக்!

Published

on

100-ல் 99 படம் பாத்துட்டேன், அந்த ஒரு படம் பார்க்க 4 மணி நேரம் ட்ராவல்; ஆனா அது சிவாஜிக்கு தோல்வி படம்: சுந்தர்ராஜன் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் ஆர்.சுந்தர்ராஜன், தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நிலையில், அவர் சிவாஜி படம் பார்க்க 4 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து, அதற்காக வீ்ட்டில் அடி வாங்கியதையும், அந்த அடி வாங்கியதற்கு அந்த படம் தகுதியானதா என்பது குறித்து பேசியுள்ளார்.கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜன், கடந்த 1982-ம் ஆண்டு வெளியான பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சரணாலயம், வைதேகி காத்திருந்தால், அம்மன் கோயில் கிழக்காலே, ராஜாதி ராஜா, திருமதி பழனிச்சாமி, என் ஆசை மச்சான், காலமெல்லாம் காத்திருப்பேன் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்,ரஜினிகாந்த, விஜயகாந்த், மோகன், சத்யராஜ், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஹிட் படங்களை கொடுத்துள்ள சுந்தர்ராஜன், நடிகராகவும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ள இவர், தற்போது சின்னத்திரையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். மேலும், சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் படத்தில் நடிகர் மணிகண்டனின் அப்பா கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார்.இதனிடையே தற்போது இந்தியா க்ளிக்ஸ் யூடியூப் சேனலில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பேசியுள்ள சுந்தர்ராஜன், அவர் நடித்த ஒரு படத்தை பார்த்து வீட்டில் அடி வாங்கிய கதையை கூறியுள்ளர். சிவாஜியின் தீவிர ரசிகன் நான். அவரை போன்ற இன்னொரு நடிகரை நான் பார்க்கவில்லை. அவர் நடித்த முதல் 100 படங்களில் 99 படங்களை நான் பார்த்துவிட்டேன். அதில் ஒரு படம் மட்டும் என்னால் பார்க்க முடியவில்லை. எங்கள் ஊரில் படம் ரிலீஸ் ஆகவில்லை. அதே சமயம் இந்த படம் சேலத்தில் வெளியாகியுள்ளது என்று தகவல் கிடைத்தது.எங்கள் ஊரில் இருந்து சேலத்தில் பஸ்ஸில் போனால் 4 மணி நேரம் ஆகும். அதனால் காலையில் கிளம்பி பேருந்தில் சென்று, அந்த படத்தை பர்த்தோம். பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் செம்ம அடி வாங்கினேன். இந்த அடி வாங்கியதற்கு அந்த படம் வொர்த்தா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அது ஒரு தோல்விப்படம். ஆனாலும் நம்ம ஆள் படமாச்சே பார்த்தே ஆக வேண்டும் என்று போனோம் என கூறியுள்ளார்.சுந்தர்ராஜன் சொன்ன அந்த படம் 1958-ம் ஆண்டு வெளியான கோடீஸ்வரன் என்ற திரைப்படம் தான். சுந்தர் ராவ் நட்கமி இயக்கிய இந்த படத்தில் சிவாஜி கணேசனுடன், பத்மினி, ராஹினி, எஸ்.பாலச்சந்தர், கே.ஏ.தங்கவேலு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் சிவாஜிக்கு தோல்விப்படமாக அமைந்தது என்று ஆர்.சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version