இந்தியா

2,417 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

Published

on

2,417 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

 கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Advertisement

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரம், சட்டபூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது. 

 சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருப்பதாக ஒரு நாடு கூறுமேயானால், நாங்கள் அத்தகைய நபர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கிறோம்.

சட்டபூர்வமற்ற முறையில் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்கிறோம். 

Advertisement

 சட்டவிரோத இடப்பெயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. சட்டப்பூர்வ குடியேற்றம் குறித்து நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 

 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய மாணவர்களின் நலன்களுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. 

Advertisement

 அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட விசா முறைகள் குறித்து நாங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். 

இந்திய மாணவர்களின் விண்ணப்பம் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் சரியான நேரத்தில் தங்கள் கல்வி நிலையங்களில் சேரமுடியும் என நாங்கள் நம்புகிறோம்  எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version