பொழுதுபோக்கு

ஒரே குடும்பம், 3 தலைமுறை நடிகர்கள்; மூவரையும் வைத்து படம் தயாரித்த பிரபலம்: இந்த பன்முக கலைஞர் யார் தெரியுமா?

Published

on

ஒரே குடும்பம், 3 தலைமுறை நடிகர்கள்; மூவரையும் வைத்து படம் தயாரித்த பிரபலம்: இந்த பன்முக கலைஞர் யார் தெரியுமா?

சினிமாவை பொறுத்தவரை ஒருவர் நடிகர் ஆகிவிட்டால், அடுத்து அவர் குடும்பத்தில் இருந்து நடிகர் நடிகைகள் வந்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் முன்னணி நட்சத்திரங்களாக மாறும்போது, அந்த குடும்பத்து நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவருக்கும் வரும். அந்த வகையில், தெலுங்கில் வெளியான மனம் படத்தில் நாகேஷ்வர ராவ், நாகர்ஜூனா, நாக சைதன்யா ஆகிய 3 தலைமுறை நடிகர்களை வைத்து ஒரு படம் வெளியானது,அதேபோல் தமிழில், விஜயகுமார் அவரது மகன் அருண் விஜய், அவரது பேரன் ஆகிய மூவரையும் இணைத்து, ஓ மை டாக் என்ற படம் வெளியானது. இந்த வரிசையில் இல்லை என்றாலும், சிவாஜி குடும்பத்தில் அவர், அவரது மகன் பிரபு, பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் நடிப்பில், படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் இருக்கிறார். இதில் சிவாஜி, பிரபு ஆகியோரின் தலா ஒரு படத்தை தயாரித்த இவர், விக்ரம் பிரபு நடிப்பில் 3 படங்களை தயாரித்துள்ளார், அந்த 3 படங்களும் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.அந்த தயாரிப்பாளர் வேறு யாரும் இல்லை கலைப்புலி தாணு தான். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் இசையமைப்பாளர், பாடல்ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கலைப்புலி தாணு, கடந்த 1999-ம் ஆண்டு, மன்னவரு சின்னவரு என்ற படத்தை தயாரித்திருந்தார், இந்த படத்தில் சிவாஜி கணேசன், அர்ஜூன் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் சிவாஜிக்காக ஒரு பாடலையும் எழுதி பாடவைத்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் எடுக்கப்பட்ட படம்.அதன்பிறகு, 2009-ம் ஆண்டு கந்தசாமி என்ற படத்தை தயாரித்திருந்தார். விக்ரம் நாயகனாக நடித்த இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபு நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அடுத்து, 2014-ம் ஆண்டு அரிமா நம்பி என்ற படத்தை தயாரித்தார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பிரபுவின் மகனும் சிவாஜியின் பேரனுமான விக்ரம் பிரபு நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தான் அவரது திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த கமர்ஷியல் படம் என்று தாணு கூறியுள்ளார்.அதனைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு 60 வயது மாநிறம், துப்பாக்கி முணை ஆகிய இரு படங்களை தாயரித்திருந்தார். இந்த இரு படங்களிலும் விக்ரம் பிரபு தான் ஹீரோ. இதில் 60 வயது மாநிறம் படம் விக்ரம் பிரபுவை ஒரு நடிகனாக நிலை நிறுத்திய நிலையில், துப்பாக்கி முணை திரைப்படம், ஒரு ஆகஷன் ஹீரோவாக அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. இதன் மூலம் ஒரே குடும்பத்தில் தாத்தா மகன் பேரன் ஆகிய மூவரையும் வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version