விளையாட்டு

ஆசியகோப்பை கிரிக்கெட்; கடைசி 33 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள்: பாகிஸ்தானை திணறடித்த இந்தியா

Published

on

ஆசியகோப்பை கிரிக்கெட்; கடைசி 33 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள்: பாகிஸ்தானை திணறடித்த இந்தியா

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்ற நிலையில், இந்த போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி கடைசி 33 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது,இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காக் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஆசியகோப்பை கிரிககெட் போட்டி கடந்த செப்டம்பர் 9-ந் தேதி துபாயில் தொடங்கியது. இதில் லீக் சுற்றுகளின் மூடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய 4 அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த சுற்றின் முடிவில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.தொடர்ந்து துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, ஃபர்ஹான் – சமான் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. குறிப்பாக ஃபர்ஹான் கிடைத்த பந்துகளை சிக்சர் பவுண்டரியாக விரட்டி ரன்கள் சேர்த்த நிலையில் 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், 38 பந்துகளில், 5 பவுண்டரி 3 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பக்கர் சமான் 46 ரன்களும், அயூப் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில் 3 வீரர்கள் டக்அவுட் ஆன நிலையில், ஒருவர் 8 ரன்னுக்கும், இருவர் 6 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். 84 ரன்களுக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி அடுத்து 58 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆல்அவுட் அனது.இதில் கடைசி 33 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, இந்திய அணி தரப்பில் சுழலில் அசத்திய குல்தீப் யாதவ், 4 விக்கெட்டுகளும், பும்ரா, அக்சர், வருண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 147 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், திலக் வர்மாவும், சுப்மான் கில்லும் விளையாடி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version