இலங்கை

இதய நோய் பற்றி வெளியான முக்கிய தகவல் ; மருத்துவர் வலியுறுத்து

Published

on

இதய நோய் பற்றி வெளியான முக்கிய தகவல் ; மருத்துவர் வலியுறுத்து

உலகளாவிய ரீதியில் இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளில், 80 சதவீதமானவை தடுக்கக்கூடியவை என இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சம்பத் விதானவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

Advertisement

அத்துடன், தடுக்கக்கூடிய இதயநோய் தொடர்பான உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமெனவும் மருத்துவர் சம்பத் விதானவசம் வலியுறுத்தியுள்ளார்.

எளிமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் இதயநோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதயநோயைத் தவிர்ப்பதற்கு உடற்பயிற்சி, சிறந்த உணவு முறை, மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்த்தல் போன்ற சில செயற்பாடுகளும், மருத்துவ பரிசோதனைகளும் அவசியமென இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சம்பத் விதானவசம் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version