இலங்கை

ஐஸ் போதைப்பொருளை விட மிகவும் ஆபத்தான போதைப்பொருள் தயாரிப்பு

Published

on

ஐஸ் போதைப்பொருளை விட மிகவும் ஆபத்தான போதைப்பொருள் தயாரிப்பு

ஐஸ் போதைப்பொருளை விட மிகவும் ஆபத்தான போதைப்பொருள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வெலிகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளை

Advertisement

பரிசோதித்ததன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் வெளிநாட்டு இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த இடத்தில் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உபகரணங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டு, அதன் மாதிரிகள் அரசு பகுப்பாய்வாளர் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Advertisement

மாதிரிகளின் முதற்கட்ட பரிசோதனைகளின்படி, குறித்த இடத்தில் ஐஸ் போதைப்பொருளை விடவும் ஆபத்தான புதிய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version