இலங்கை
கேபிள் வண்டி விபத்தில் மற்றுமொரு பிக்கு பலி
கேபிள் வண்டி விபத்தில் மற்றுமொரு பிக்கு பலி
கடந்த 24 ஆம் திகதி மெல்சிரிபுர நா உயனவில் உள்ள ஆரண்ய சேனாசனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட கேபள் வண்டியொன்று உடைந்து விழுந்த சம்பவத்தில் மற்றுமொரு பௌத்த பிக்கு உயிரிழந்துள்ளார்.
முன்னதாக இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த ஏனைய பிக்குமார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதுடைய மற்றுமொரு பௌத்த பிக்கு இன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.