பொழுதுபோக்கு
சினிமாவில் என் முதல் நண்பன் சிம்பு, அவர் நடிக்க அழைத்தும் நான் போகல… ஆர்.ஜே.பாலாஜி ஓபன்!
சினிமாவில் என் முதல் நண்பன் சிம்பு, அவர் நடிக்க அழைத்தும் நான் போகல… ஆர்.ஜே.பாலாஜி ஓபன்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் முதலில் தனது வாழ்க்கையை ரேடியோ ஜாக்கியாகவே தொடங்கினார். இதனால் தான் ஆர்.ஜே.பாலாஜி என்று அழைக்கப்படுகிறார். இதையடுத்து, சினிமாவில் துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் அறிமுகமானார். ‘நானும் ரவுடிதான்’ மற்றும் ‘வட சென்னை’ போன்ற படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி விமர்சகர்களின் பாராட்டை பெற்றார். தொடர்ந்து, ‘எல்கேஜி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அரசியல் சார்ந்த கருத்துகளை கமெடி வடிவில் இப்படத்தில் பேசியிருந்தார்.இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியை பெற்றது. தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி, நடிப்பு, இயக்கம், நகைச்சுவை என பல பரிணாமங்களில் அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து இயக்கப்படும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.இப்படி பிசியாக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி, சிம்பு படத்தில் நடிக்க மறுத்தது குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “சினிமாவில் என்னுடைய முதல் நண்பர் சிம்பு தான். நான் ஆர்.ஜே-வாக இருந்த போது சிம்பு எனக்கு கால் பண்ணி பேசினார். அப்போது சிம்பு பேசுறேன் என்றார். நான் யாரோ விளையாடுவதாக நினைத்துக் கொண்டு நான் தங்கர்பச்சன் பேசுகிறேன் என்றேன். இப்படி சிம்புவிற்கு என்னை பிடித்துவிட்டது. சிம்பு என்னிடம் சொல்வார் சந்தானத்தை நான் தான் திரைத்துறையில் அறிமுகம் செய்தேன். அதேபோல் உன்னையும் நான் தான் அறிமுகம் செய்வேன் என்றார். அப்போது சிம்புவுடன் ஒரு படத்தில் நான் நடிப்பதாக இருந்தேன். அந்த நேரத்தில் இயக்குநருக்கு அதில் விருப்பம் இருக்கா இல்லையா? என்று தெரியவில்லை. அப்போது சிம்பு நான் சொன்னால் நடக்கும் நான் பேசுகிறேன் என்றார். நான் இல்லை சார் நாளைக்கு டேய் இங்கே வாடா என்று கூப்பிட்டால் நானும் இருடா வறேன் என்பேன். நான் இயற்கையாகவே இப்படி தான். நீங்கள் எல்லா நேரத்திலும் என்னை பாதுகாக்க முடியாது. அதனால் வேண்டாம் என்றேன்” என்றார்.