இலங்கை

தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; ஆடைக்காக உயிர்மாய்த்துக்கொண்ட 13 வயது சிறுமி

Published

on

தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; ஆடைக்காக உயிர்மாய்த்துக்கொண்ட 13 வயது சிறுமி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை (27) மாலை இடம்
பெற்றுள்ளது

கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம்குடாவைச் சேர்ந்த 9ஆம் தரத்தில் கல்விகற்கும் 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

Advertisement

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலை
செய்துவரும் நிலையில் தாயுடன் குறித்த சிறுமியும் அவரது இரட்டை சகோதரியும்
வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து தந்தையார் இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் அனுப்பியுள்ளார்

இந்த நிலையில் அடுத்த மாதம் நாட்டுக்கு
திரும்பி வந்ததும் குறித்த சிறுமிக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் தருவதாக
தந்தையார் கூறியுள்ளார்.

Advertisement

இதனையடுத்து தனக்கு ஆடைகள் வாங்க தந்தை பணம் தரவில்லை என கோபமடைந்த சிறுமி நேற்று மாலை 5.45 மணியளவில் வீட்டில் உள்ள கூரையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு உறவினர்கள் அவரை மீட்டு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் அவர்
உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version