இலங்கை
த.வெ.க தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – விசாரணை தீவிரம்
த.வெ.க தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் – விசாரணை தீவிரம்
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலமாக காவல்துறை அலுவலகத்திற்கு இந்த மிரட்டல் வந்துள்ளது.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விஜய்யின் வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், காவல்துறை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.