சினிமா

நடிகர் அஜித் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த A.R. முருகதாஸ்..!

Published

on

நடிகர் அஜித் பற்றி பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்த A.R. முருகதாஸ்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்ட நடிகர் அஜித் குமார் பற்றி, பிரபல இயக்குநர் A.R. முருகதாஸ் சமீபத்திய நேர்காணலில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.”இன்று அஜித் சார் இந்த உயரத்தில் இருக்கிறாரே, அதுக்கு காரணம் அவருடைய உழைப்பும் பண்பும் தான்…” என ஆரம்பித்த முருகதாஸ், அவருடைய ஆரம்ப கால தியாகங்களை, சினிமாவிற்கான அவரது நெஞ்சார்ந்த விருப்பத்தையும் உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ளார்.முருகதாஸ் தனது திரை பயணத்தின் தொடக்கத்தில், ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றிய காலத்தை நினைவுகூர்ந்து கூறியதாவது, “நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்தப்போ, ஒரு தடவை அஜித் சார் ஆப்பரேஷனுக்கு பிறகு நேரடியாக ஆம்புலன்ஸ் மூலம் வந்து, டப்பிங் பேசி கொடுத்துட்டு போனாரு…அவருடைய இளமை பருவத்திலேயே சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். இதுபோல ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் அஜித் சார் கிட்ட இருக்கு…” என்றார். இந்த சம்பவம், ஒரு நட்சத்திர நடிகரின் தொழில்முறை ஈடுபாடு மற்றும் உழைப்பை பிரதிபலிக்கிறது. இன்று அவர் இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்திருக்கிறார் என்றால், இது போன்ற தியாகங்களும் அதற்குக் காரணம் என முருகதாஸ் வலியுறுத்துகிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version