இலங்கை

நடிகர் விஜய்யின் கூட்டம் தொடர்பில் அம்பலமாகும் தகவல்கள் ; திருமண நிச்சயமான ஜோடியின் வாழ்க்கையை பறித்த நெரிசல்

Published

on

நடிகர் விஜய்யின் கூட்டம் தொடர்பில் அம்பலமாகும் தகவல்கள் ; திருமண நிச்சயமான ஜோடியின் வாழ்க்கையை பறித்த நெரிசல்

தமிழ்நாடு – கரூரில் நேற்று (27) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை சேர்ந்த ஆகாஷ் (24) என்பவரும், கோகுலஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்குமுன் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.

திருமண நிச்சயம் முடிந்த ஆகாஷ், கோகுலஸ்ரீ ஜோடி நேற்று கரூரில் நடந்த த.வெ.க கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர்.

Advertisement

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆகாஷ், கோகுலஸ்ரீ இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.        

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version