பொழுதுபோக்கு

நீங்க உள்ள வந்தா, கதை கொஞ்சம் மாறும்; இந்த படம் பண்ண அதுதான் காரணம்; ‘இட்லி கடை’ தனுஷ் பற்றி அருண் விஜய் ஓபன் டாக்!

Published

on

நீங்க உள்ள வந்தா, கதை கொஞ்சம் மாறும்; இந்த படம் பண்ண அதுதான் காரணம்; ‘இட்லி கடை’ தனுஷ் பற்றி அருண் விஜய் ஓபன் டாக்!

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத்தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். 52 படங்கள் நடித்துள்ள தனுஷ், ‘பா.பாண்டி’, ‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது ‘இட்லி’ கடை படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பார்த்திபன் சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ளார். மேலும், அருண் விஜய் , சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு கடந்த சில நாட்களாக வெளியிட்டது. ‘இட்லிகடை’ திரைப்படத்தை ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின்  பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வைஃப்பாக்கி வருகிறது. ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரொமோஷன்களில் நடிகர் தனுஷ் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில், ‘இட்லிகடை’ திரைப்படத்தில் நடித்தது குறித்து நடிகர் அருண் விஜய் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “இட்லி கடை திரைப்படத்தை தனுஷ் இயக்குகிறார் என்பது எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்பு அவர் இயக்கி இருந்த ‘ராயன்’ திரைப்படமும் அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தை கையாண்ட விதமும் பிடித்திருந்தது. அவரிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும்.நாம் செல்லும் பாதை அவருக்கு தெரியும். நம்மை அழைத்திருக்கிறார் என்றால் அதில் ஒரு முக்கியத்துவம் இருக்கும்.  அதுமட்டுமல்லாமல், திரைக்கதையை வேறு மாதிரி கொடுப்பார் என்ற நம்பிக்கையும் இருந்தது.அதைதான் திரையில் பார்க்கப்போகிறீர்கள். மேலும், ‘இட்லி கடை’ திரைப்படத்தின் கதை பிடித்திருந்தது. அந்த கதை மிகவும் அழமான கதையாக இருந்தது. 40 நிமிடங்கள் தான் நானும் தனுஷும் பேசினோம். ரொம்ப சிம்பிளாக தான் கதை சொன்னார். அவர் சொன்னது எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது.எனக்கு என்ன தேவையோ அதை சொன்னார். நீங்கள் படத்தில் நடிக்கிறீர்கள் என்றால் இன்னும் சில விஷயங்கள் செய்வேன் என்று தனுஷ் கூறியிருந்தார். உடனே சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு தனுஷ் மீதும் என் மீதும் ஒரு நம்பிக்கை இருந்தது” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version