இலங்கை

ரயிலில் மோதி பெண் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

Published

on

ரயிலில் மோதி பெண் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

 ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் பெண்ணொருவர் ரயிலில் மோதுண்டு பலத்த காயங்களுடன்  டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவமானது இன்று (30) பிற்பகல் 1:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

Advertisement

பொடி மெனிகே ரயில் இயக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது குறித்த பெண் ரயிலில் பாய்ந்துள்ளதாகவும், விபத்தில் படுகாயமடைந்த பெண் நீண்ட நேரம் ரயில் பாதைக்கு அருகில் நின்று கொண்டிருந்ததாகவும் அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version