பொழுதுபோக்கு
விபத்தை சந்திக்காத வரை வேகத்தை உணர முடியாது; கார் பந்தயம் பற்றி மனம் திறந்த அஜித்!
விபத்தை சந்திக்காத வரை வேகத்தை உணர முடியாது; கார் பந்தயம் பற்றி மனம் திறந்த அஜித்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித்குமார், விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வம் காட்டி வருமு் நிலையில், கார் பந்தையத்தில் களமிறங்கியுள்ளார். இதில் அவர் தனது டீமுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: கார் பந்தயத்தில் உள்ள அபாயங்கள் அனைவரும் அறிந்தத ஒன்றுதான். பந்தயச் சுற்றுகளில் விபத்துகள் ஏற்படுவது இதில் பங்கேற்பவர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கும் புதிதல்ல. இருப்பினும், கார் பந்தயம் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாத அஜித்தின் ரசிகர்களுக்கு, அவர் சமீபத்தில் சந்தித்த விபத்துகள் மிகுந்த பயத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் பந்தயத்தை விட்டுவிட்டு முழுவதுமாக சினிமாவுக்குத் திரும்ப வேண்டும் என்று பலர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.இதனிடையே கார் பந்தயத்தில் உள்ள அபாயங்களைப் பற்றி நடிகர் அஜித்குமார் அண்மையில் மனம் திறந்து பேசினார். விபத்துகளைத் தாண்டி ஏன் இந்த விளையாட்டைப் பார்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி பேசிய அவர், தான் எதிர்கொண்ட காயங்களில் பெரும்பாலானவை படப்பிடிப்பின்போது நிகழ்ந்தன என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அந்தச் சம்பவங்கள் தன்னை அபாயங்களை எடுக்காமல் தடுக்கவில்லை என்றால், பந்தயச் சுற்றுகளில் நடக்கும் விபத்துகள் ஒருபோதும் தடுக்காது என்று உறுதியாகத் தெரிவித்தார்.அவர் இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், “ஒரு ஓட்டுநராக, நீங்கள் சுற்றை விட்டு வெளியேறும் வரை அல்லது ஒரு மோசமான விபத்தை சந்திக்கும் வரை, நீங்கள் எந்த வேகத்தில் செல்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள். இல்லையெனில், உங்கள் பிரேக்கிங் புள்ளிகள் (Breaking points) மற்றும் இலக்கைக் குறிப்பதில் நீங்கள் மிகவும் பிஸியாகவும், கவனம் செலுத்துபவராகவும் இருப்பீர்கள். கார் உள்ளே பல விஷயங்கள் நடக்கும். உங்கள் குழு, பந்தயப் பொறியாளர் (race engineer) போன்றோருடன் பேசிக்கொண்டிருப்பீர்கள்,” என்று பகிர்ந்து கொண்டார்.பந்தயத்திற்குத் திரும்புவது தனக்குள் பலவிதமான உணர்ச்சிகளைக் கலந்ததாகக் கூறிய அஜித், ஒரே நேரத்தில் உற்சாகம், பயம், அச்சுறுத்தல் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகளால் தான் மூழ்கியிருந்ததாக நினைவு கூர்ந்தார். துபாய் 24H பந்தயத்திற்கு முன்னதாக தான் சந்தித்த விபத்து குறித்துப் பேசிய அஜித், “அன்று முதல், நான் சந்தித்த விபத்துகள் குறித்துப் பலர் கருத்துத் தெரிவிப்பதைக் காண்கிறேன். ஆனால், எந்தவொரு குழு அல்லது ஓட்டுநரிடம் கேட்டாலும், விபத்துகள் மோட்டார்ஸ்போர்ட்டின் ஒரு அங்கம் என்று அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அது பயங்கரமானது, ஆம். ஆனால், இந்த கார்கள் அந்த நோக்கத்திற்காகவே கட்டப்பட்டுள்ளன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஒரு காரை வடிவமைக்கும்போது ஓட்டுநரின் பாதுகாப்புக்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிது. இருப்பினும், நீங்கள் காரின் வரம்புகளையும் உங்களின் வரம்புகளையும் தாண்டிச் செல்ல முயற்சிக்கும்போது, விபத்துகளும் மோதல்களும் நடப்பது இயல்புதான் என்று கூறியுள்ளார்.இவை இருந்தபோதிலும், இந்த விபத்துகள் அவரது மன உறுதியைப் பாதிக்கவில்லை. “சினிமாவைப் பாருங்கள். பல்வேறு காயங்கள் காரணமாக எனக்கு ஏற்பட்ட அனைத்து காயங்களும், நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் திரைப்படப் படப்பிடிப்பின் நான் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவை என்னை தடுக்கவில்லை. மேலும், ‘ஐயோ, உங்களுக்கு காயம் ஆகிறது. தயவுசெய்து படங்கள் செய்ய வேண்டாம்’ என்று ரசிகர்களும் என்னிடம் சொல்லவில்லை. எனவே, இது ஏன் மோட்டார்ஸ்போர்ட்டில் இருந்து விடுபட வேண்டும்?” என்று கேள்வியெழுப்பினார்.அஜித்குமார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குநர் மகிழ் திருமேனியின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் சற்று சுமாரான வரவேற்பைப் பெற்ற நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அதைவிடச் சிறப்பாக வசூல் செய்தது.