சினிமா

‘Arrest vijay’.. கரூரில் பலியான மக்கள்.. தவெக விஜய்யை கைதி செய்ய சொன்ன நடிகை ஓவியா

Published

on

‘Arrest vijay’.. கரூரில் பலியான மக்கள்.. தவெக விஜய்யை கைதி செய்ய சொன்ன நடிகை ஓவியா

நேற்று கரூரில் நடைபெற்ற தவெக கட்சியின் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கிய 39 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் கொடுத்துள்ளது. விஜய்யிடம் இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியும் அவர் எந்த ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டார்.இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். இறந்தவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்திய பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலினிடம், ‘விஜய் கைது செய்யப்படுவாரா’ என கேள்வி கேட்கப்பட்டது.இதற்கு அவர் அளித்த பதில், “நடந்த துயரத்தை பார்த்து வீட்டில் இருக்க முடியவில்லை. சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்க உத்தரவிட்டுள்ளேன். அரசியல் நோக்கத்தோடும் எதையும் கூற விரும்பவில்லை. ஒரு நபர் ஆணையம் மூலம் உண்மை வெளிவரும், ஆணையம் அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.இந்நிலையில், நடிகை ஓவியா தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்துள்ள பதிவு படுவைரலாகி வருகிறது. இதில் ‘Arrest vijay’ என அவர் பதிவு செய்துள்ளார். மேலும் அரசியல்வாதிகளும், திரையுலகினர் பலரும் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version