விளையாட்டு
India vs Pakistan, Asia Cup 2025 final: இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்… ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?
India vs Pakistan, Asia Cup 2025 final: இறுதிப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல்… ஆன்லைனில் இலவசமாக பார்ப்பது எப்படி?
Ind vs Pak, Asia Cup 2025 final Cricket Match Live Streaming Today: 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. மிகவும் பரபரப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றன.லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. தற்போது இந்த அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும். இதில் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் 3 போட்டிகளில் ஆடி 2-ல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) இரவு 8 மணிக்கு துபாயில் அரங்கேறுகிறது.இந்தியா vs பாகிஸ்தான் மோதல் – நேரலையில் பார்ப்பது எப்படி? இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி 2025: ஆசிய கோப்பை இறுதிப் போட்டி எப்போது நடைபெறும்?இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி செப்டம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி போட்டி இரவு 8:00 மணிக்கு தொடங்க இருக்கிறது. டாஸ் 7:30 மணிக்கு போடப்படும். இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டி எங்கு நடைபெறும்?இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை எந்த தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புகிறது?இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை ஆன்லைனில் நேரடியாக எப்படி பார்ப்பது?இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியை சோனி லிவ் ஆப் மற்றும் இணைதளம் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யும். இந்தப் போட்டியை ஓ.டி.டி பிளே ஆப்-பிலும் நேரடியாக பார்க்கலாம்.